• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்தற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் – ராகுல் கவுடா

August 30, 2018 தண்டோரா குழு

ரபேல் விமானங்களை வாங்கியது தொடர்பாக விலைகளை வெளிப்படையாக அரசு வெளியிட்டு விட்டு ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராகுல் கவுடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ரபேல் விமான கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது 128 விமானங்களை வாங்கவும் விமானத்திற்கு விலையாக 526 கோடி ரூபாய் வழங்குவதோடு கூடுதல் விமானங்களை இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் வகையிலும் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால்,தற்போதைய பாஜக அரசில்,பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு பிறகு விமானங்களை வாங்குவதில் பெரிய அளவில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்பட்டு மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு சாதகமான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

சீனாவில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் அனில் அம்பானியை காக்க பிரதமர் மோடி ஏன் மக்களின் பணத்தை செலவழிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர் 3மடங்கு அதிக விலை கொடுத்து அவ்விமானங்களை வாங்குவதின் மூலம் இந்த விமானப்படைக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்பட போவதில்லை.

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சிக்கும் மத்திய அரசு முதலில் விமான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படையாக விலைகளை தெரிவித்துவிட்டு பின்னர் ராகுல் கூறும் கருத்துக்களை விமர்சிக்கட்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும்,பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியடைந்து உள்ளதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். கர்நாடகாவில் மேகதாட்டூவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம்”. இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க