August 30, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர்க்கான ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது நாளான நேற்று மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கலந்துக் கொண்டு தங்கம் பதக்கம் வென்றார்.
இதில் 100மீ ஓட்டத்தில் 981 புள்ளிகள் (5வது இடம்),உயரம் தாண்டுதலில் 1003 புள்ளிகள் (முதலிடம்), குண்டு எறிதலில் 707 புள்ளிகள் (2வது இடம்),200மீ ஓட்டத்தில் 790 புள்ளிகள் (7வது இடம்),நீளம் தாண்டுதலில் 865 புள்ளிகள்(2வது இடம்),ஈட்டி எறிதல் 872 புள்ளிகள்(முதலிடம்),800 மீ ஓட்டத்தில் 808 புள்ளிகள் (4வது இடம்) என மொத்தமாக 6026 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கதை வென்றார்.
இந்நிலையில் தங்க பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில்,”இந்த வெற்றி ஸ்வப்னா பர்மானின் திறமையின் எடுத்துக்காட்டு தான். உன்னை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது”.என அதில் குறிப்பிட்டுள்ளார்.