August 29, 2018
தண்டோரா குழு
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் உடமைகளை இழந்து வறுமையால் வாடி கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்காக நிதி திரட்டப்பட்டு 3லாரிகள் மூலம் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களான பாய்,தலையனை,பெட்ஷீட்,அரிசி,கோதுமை, பருப்பு,குடிநீர் என அனைத்து உணவுப் பொருட்களும் இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை போத்தனூர் பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பகுதிக்கு அனுப்பப்பட்டது.இதை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் உமர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.