August 29, 2018
தண்டோரா குழு
திமுக தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைடுத்து அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இதனையடுத்து,தலைவர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.
மேலும்,திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவராக பதவியேற்றுள்ள
மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.