August 29, 2018
தண்டோரா குழு
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும்,நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார்.
தெலங்கானா நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி- அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்றபோது,ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிகிருஷ்ணா,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த ஹரிகிருஷ்ணா தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.