August 28, 2018
தண்டோரா குழு
கோவையில் டயமண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் சார்பில் பட்டம் விடும் திருவிழா வருகிற செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
உலகின் மிகப் பழமையான மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படுவது பட்டம் விடுவது.சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பட்டம் விட விரும்புவர்.வீசும் காற்றின் திசை உணர்ந்து விசை அறிந்து வானில் பட்டம் பறக்கையில் நம் மனமும் லேசாகி விடும்.சரசரவென சர்ப்பம் போல காற்றில் ஊர்ந்து ஏறி விண்ணில் பறக்கும் பட்டங்களை விடுவது மட்டுமல்ல பார்ப்பதே கூட இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அதிகம் சாத்தியமில்லாத ஒன்று.தற்போது நகர்ப்புற நெருக்கடி மற்றும்இடப்பற்றாக்குறை காரணமாக பட்டம் விடுவது என்பதே அரிதாகிவிட்டது.
இதையடுத்து,நாம் இழந்து விட்ட மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் விதமாகவும்,விதம் விதமான வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறக்கும் மிதக்கும் குதுகல காட்சியனுபவத்தை நம் சிறார்கள் கண்டு களிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் டயமண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில் பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு அழகிய வண்ண பட்டம் வழங்கப்படுகிறது.சர்வதேச அளவில் பட்டம் விடும் நிபுணர்களது நேரடி ஆலோசனையில் நாம் பட்டங்களைப் பறக்க விடலாம்.அத்துடன் வண்ணமயமான ராட்சச பட்டம்,300 பட்டங்களைக் கொண்ட சங்கிலித்தொடர் பட்டம்,விசிலடிச்சான் பட்டம்,டிராகன் பட்டம்,மிருகங்களின் வடிவிலான பட்டம் உள்பட பல்வேறு விதமான பட்டங்களை நிபுணர்கள் பறக்கவிட உள்ளார்கள்.
இவ்வகை தனிச்சிறப்புள்ள பட்டங்கள் காலை 7.30 மணி முதல் 8 மணி வரையிலும்,மாலை 4மணி முதல் 4.30 மணி வரையிலும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் பறக்கவிடப்படும்.இதற்காக சர்வதேச பட்டம் விடும் போட்டிகளில் பரிசு பெற்ற நிபுணர்கள் பெங்களூரிலிருந்து வருகை தர உள்ளார்கள்.
மேலும்,விதம் விதமான பட்டங்களைப் பறக்க விடும் கலையினை அவர்களிடம் நேரடியாக கற்றுக்கொள்ளலாம்.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை.ஆனால்,முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
பட்டம் விடும் திருவிழாவில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் www.diamond-city.in/kitefestival என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பின்,டைமண்ட் சிட்டி டெவலப்பர்ஸ்,இண்ட்சில் ஹவுஸ்,இரண்டாம் தளம்,103-107, டி.வி.சாமி ரோடு (மேற்கு),ஆர்.எஸ்.புரத்தில் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும்,பட்டம் விடும் திருவிழா செப்டம்பர் 1,2 தேதிகளில் ஆர்.எஸ்.புரத்திலிருந்து சுண்டபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள டைமண்ட் சிட்டி வளாகத்தில் நடைபெறுகிறது.பட்டம் விடுதல் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை மற்று மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை இரண்டு நாட்களும் நடைபெறும்.தொடர்புக்கு ஜேம்ஸ்: 9626855583.