August 28, 2018
தண்டோரா குழு
கோவையில் ராஜஸ்தான் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு,ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டது.
கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில்,ரக்ஷா பந்தன் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றது. கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கமும்,பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 150 சுகாதார பணியாளர்களுக்கு,ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டது.மழை காலங்களில் பணிபுரியும்,துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு கருதி,இந்த ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் ஒவ்வொருவருக்கும் ராக்கி கயிறுகளை கட்டினர்.இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு ராக்கி கட்டினார்.இந்நிகழ்வில் ராஜஸ்தானி சங்கத்தினர், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
இவ்விழாவில் பேசிய பா.ஜ.மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்,
“தமிழ்நாட்டில் ரக்ஷாபந்தன் தனியாக விழாவாக கொண்டாடப்படுவது இல்லை.குடும்பத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும்,சகோதர சகோதரி உறவு என்பது மிகவும் உன்னதமானது.ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும்.
நம்முடைய வீட்டில் மட்டுமில்லாமல் நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சகோதார சகோதரிகளாக நினைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.மழை வந்ததாலும்,வெயில் அடித்தாலும் பணத்திற்காக மட்டுமில்லாமல் ஆத்மார்த்தமாக இந்த பணியை செய்யும் சுகாதார தொழிலாளர் சகோதர,சகோதிரிகளை கெளரப்படுத்தும் விதமாக அவர்களுடைய கையில் ராக்கி கட்டிவிட்டு நீங்களும் எங்களுடய சகோதர,சகோதிரிகள் என்று நினைத்துள்ளளோம்.
நம்முடைய பிரதமர் சுகதார பணியாளர்கள் குடும்பத்தில் அக்கறை கொண்டு,சுகாதார பணியாளர்களின் உடல் முழுவதுமாக இலவச பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.சுகாதார பணியாளர்கள் முதலில் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும்.இன்று அதிக இளம்விதவைகள் சுகாதார பணியாளர்களின் குடும்பத்தில் தான் உள்ளனர்.
மனிதர்களே மனித கழிவுகளை அள்ளும் நிலை மாறிக் கொண்டே வருகிறது.இன்று நிறைய இயந்திரங்கள் மூலம் குப்பைகள் சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்று வருகின்றது.எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்ற குறிப்புகள் வழங்கப்படும் அரசாங்கத்தின் திட்டங்களை பயன்படுத்த வேண்டும்”.இவ்வாறு பேசினார்.