August 28, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைடுத்து அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது.இதனையடுத்து,தலைவர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
இதற்கிடையில்,திமுகவின் 2-வது தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் #DMKThalaivarStalin என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி டுவிட்டரில் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது,இந்த ஹேஸ்டேக் டுவிட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.