August 28, 2018
தண்டோரா குழு
திமுகவிலிருந்து செயல் தலைவர் பதவியை நீக்கி பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து,அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது.இதனைத்தொடர்ந்து,தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது.இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும்,பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆனால்,தலைவா் மற்றும் பொருளாளா் பதவிக்கு வேறு நபா்கள் போட்டியிடாததால் தலைவராக மு.க.ஸ்டாலினும்,பொருளாராக துரைமுருகனும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து,திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.இதில்,திமுகவின் 2வது தலைவராக தேர்வு மு.க.ஸ்டாலின் செய்யப்பட்டார்.அதைப்போல் துரைமுருகன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து,திமுக செயல்தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட உடல் நலகுறைவு காரணமாக மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.