August 28, 2018
தண்டோரா குழு
தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினையும்,பொருளாளராக துரைமுருகனையும் கட்சியின் பொதுச்செயலாளா் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தாா்.திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“கருணாநிதியின் மகன் என்பதைவிட அவரது தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன்.நான் கருணாநிதி இல்லை,அவர் போல் எனக்கு பேசத் தெரியாது,பேசவும் முடியாது.திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன்.எனது பெரியப்பா பேராசிரியர் அன்பழகன்,பெரியப்பாவிடம் நல்ல பெயர் பெறுவது 200 மடங்கு சமம்.திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை.தமிழகத்தில் சுயமரியாதை கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.முதுகெலும்பில்லாத மாநில அரசை தூக்கி எறிய வா; அழகான எதிர்காலத்தை ஒன்றாக அமைப்போம்.மேலும்,இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” இவ்வாறு பேசினார்.