August 27, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்க பதக்கத்தை வென்றார்.
மேலும்,400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கத்தையும்,மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.மகளிருக்கான 3,000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் வெள்ளி வென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம்,13 வெள்ளி,20 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.