• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலினின் கவலைக்கு மேடையில் மருந்து கொடுத்த நடிகர் பார்த்திபன்

August 25, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் ” மறக்க முடியுமா கலைஞரை” என்னும் தலைப்பில் திரைப்படத்துறையினர் பங்குபெறும் அஞ்சலி நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணைபொதுசெயலாளர் துரைமுருகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சத்யராஜ், சிவக்குமார்,ராதாரவி, ராஜேஷ், பிரபு, பிரகாஷ் ராஜ்,மோகன் பாபு இயக்குநர் பாரதி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசுகையில்,

தமிழ் எனக்கு உயிர் போன்றது. கலைஞர் இறந்த பிறகு தமிழுக்கே உயிர் போனது. உலகின் எந்த தலைவருக்கு கிடைத்த தொண்டர்கள் கலைஞருக்கு கிடைத்துள்ளனர்.கலைஞர் மறைந்த பிறகும் அவரின் உடன் பிறப்புகளான உங்களை தான் நான் கலைஞராக பார்க்கிறேன் என்றார்.

அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த நடிகர் பார்த்திபன் ஸ்டாலின் மிகவும் கவலையாக உள்ளார்.அவருக்கு நான் ஒரு டானிக் வைத்திருக்கேன் என்று ஸ்டாலினை மேடைக்கு அழைத்து ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டு அணிவித்தார். அப்போது தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.

மேலும் படிக்க