August 25, 2018
தண்டோரா குழு
மேலடுக்கு சுழற்சி அதிக வலுவுடன் உள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவை ஓட்டிய கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடும் மேகமூட்டமாக இருக்கும் என்றும் மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்யும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேலும்,சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது .