• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தர பிரதேச வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள்

August 25, 2018 தண்டோரா குழு

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக சன்னி லியோன், மான், புறா, யானை புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியதற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் புகைப்பட மாற்றி அச்சிடப்படுவதும், பெயர் மாற்றி அட்டைகள் வழங்கப்படுவது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. இதற்கிடையில், 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்று, அதனை சரிபார்த்து, இறுதி பட்டியல் வெளியிடும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில், பிரபல இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. அதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது போன்று பல வாக்காளர்களின் படங்களுக்கு பதில் காட்டு விலங்குகளின் படம் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையடுத்து, இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க