ஆசிய விளையாட்டில் 6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை ரிகாகோ சாதனை படைத்துள்ளார் .
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை ரிகாகோ இகீ,50 மீட்டர்,100 மீட்டர் பட்டர்பிளை,50 மீட்டர்,100 மீட்டர் பிரிஸ்டைல்,4 x 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல்,4x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் ஆகிய போட்டிகளில் கலந்துக் கொண்டு 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற சாதனையை ரிகாகோ இகீ படைத்துள்ளார் .இதற்குமுன் 1982-ம் ஆண்டு வடகொரியவைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு