August 24, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடக்கவிருக்கும் கலைஞர் கருணாநிதி நினைவேந்தலில் தேசிய தலைவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து தற்போது கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 30ந் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ள கலைஞர் நினைவு கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,பரூக் அப்துல்லா,குலாம் நபி ஆசாத்,தேவகவுடா மற்றும் டெரிக் ஒ பிரையன் மற்றும் ஏராளமான தேசிய,தமிழக தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
ஆனால்,இன்னும் அதிமுகவுக்கு அழைப்பு வழங்கப்படவில்லை.அழைப்பு வந்தால் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.