• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவி திவ்யாவுக்கு பாராட்டு விழா!

August 24, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிராமம் பந்தலூரை சேந்தவர் திவ்யா. அங்கு தமது ஆரம்ப கல்வியை பயின்ற அவர் மேல்நிலை வகுப்பை கோவை மணி மேல்நிலை பள்ளியில் பயின்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் கோவை மற்றும் சென்னையில் தமது ஐபிஎஸ் பயிற்சியினை பெற்றார். இவரது தந்தை தேவேந்திரன் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக் டராக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையில் தேசிய அளவில் நடைபெற ஐபிஎஸ் தேர்வில் 560 வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆக தேர்வாகியுள்ளார். இந்நிலையில், கோவை நேரு கல்வி குழுமம் மற்றும் டிரிபிள் எம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் இவருக்கு பாராட்டு விழா கோவை ஹெரிடேஜ் இன் ஹோட்டலில் திவ்யாவுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை நேரு கல்வி குழுமங்களின் இயக்குனர் (மக்கள் தொடர்பு) முரளிதரன் வரவேற்றார்.

விழாவில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா பேசுகையில்,

கோவையை சேர்ந்த ஒருவர் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது பெருமைக்குறிய விசயமாகும். ஆதற்கும் மேல் இவர் ஒரு காவல்துறையை சேர்ந்தவரின் மகள் என்பது மிகவும் பெருமையாகும். இது இவரின் தந்தையின் நேர்மைக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும். விடா முயற்சியுடன் கடினமாக படித்து இந்த வெற்றியை பெற்றிருக்கின்றார் இது பாராட்ட வேண்டிய விசயமாகும். இந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணியில் உள்ளவர்களை சில தனியார் நிறுவனங்கள் மிக அதிக ஊதியம் வழங்கி தங்கள் நிறுவனங்களுக்கு பணியாற்ற அழைப்பார்கள். இது இவர்களின் அறிவு, திறமை, உழைப்பு மற்றும் நேர்மைக்கு கிடைக்கும் மதிப்பாகும். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் நல்ல நிலைக்கு வளர்ச்சி பெரும். ஆனால் இவர்கள் தனியாருக்கு வேலை செய்வதை விட அரசு பணியாற்றவே அதிகம் விரும்புவார்கள். நாம் வாங்கும் சம்பளத்தில் திருப்தி அடைந்து கொள்ள வேண்டும். செய்த சாதனைகளில் திருப்தி அடையக்கூடாது என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி ஜூயாவுதீன் பேசுகையில்,

பதவி வரும் போது பணிவும் வரவேண்டும், துணிவும் வர வேண்டும். காவல் துறையில் பணியாற்றும் போது துணிவுடன் யாராக இருந்தாலும் எனது பணியை சரியாக செய்வேன், என்ற என்னம் வரவேண்டும். நாம் யாரை பாராட்ட வேண்டும் என்றாலும் அவர்களை உடனடியாக பாராட்டிவிட வேண்டும். ஆண்களை விட பெண்களும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள் என்றார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட போலீஸ் நண்பர்கள் அமைப்பு, நாக்குபேட்டா படுகர் நல சங்கம், கோவை படுகர் ஜன சங்கம் மற்றும் கோவை ரேஸ் கோர்ஸ் நடப்போர் நண்பர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்து இருந்தானர். விழாவின் முடிவில் சம்பந்தன் மில்ஸ் சேர்மன் அருணாச்சலம் நன்றி கூறினார்.

மேலும் படிக்க