August 24, 2018
தண்டோரா குழு
கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா பள்ளி சார்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அம்மாநிலம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதுடன் வெள்ளத்தால் லட்சக்கணக்காணோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதிலுமிருந்து நிவாரணங்கள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரபல கவ்வி நிறுவனமான ஸ்ரீ சைதன்யா பள்ளி சார்பில் கோவையிலிருந்து 3 லாரிகள் மூலம் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அரிசி,பருப்பு வகைகள்,குடிநீர்,பால் பொருட்கள், மெழுகுவர்த்திகள், சமையல் பாத்திரங்கள்,பிஸ்கட்டுகள்,பிளீச்சிங் பவுடர்,டெட்டால் சோப்புகள் என 30 பொருட்களுடனான லாரிகளின் பயணத்தை மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து ஆணையர் விஜய கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பள்ளி முதல்வர் மாலதி,
தமிழகம் முழுவதிலுமுள்ள தங்கள் பள்ளியின் 20 கிளைகளின் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே கேரள நிவாரணத்திற்காக முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கில் 1.1 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தற்போது கோவையிலுள்ள தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள இரண்டு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் சார்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.