August 23, 2018
தண்டோரா குழு
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான விளம்பர தூதராக நடிகர் விவேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும்,மாற்றுப் பொருட்கள் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறும்படம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கைகளை குறிக்கும் லோகோ,இணையதளங்கள் ஆகியவை வெளியிடப்பட்டன.
தூய்மையான தமிழகத்தை உருவாக்க ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுபொருட்களை பயன்படுத்த வேண்டும்.மேலும்,அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளர்.
இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விளம்பரத் தூதராக நடிகர்கள் விவேக்,சூர்யா,கார்த்தி,ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.