• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான் -ஹர்பஜன் சிங்

August 22, 2018 தண்டோரா குழு

மெட்ராஸ் தினத்தை ஒட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்,தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் முதன் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.சென்னை அணியில் இணைந்தது முதலே தமிழில் ட்விட் செய்து அசத்தினார்.அதன் பின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கு பின்னும் தமிழில் டுவீட் செய்து அசத்தி வந்தார்.இதனால் ஹர்பஜனின் தமிழில் டுவீட்டுக்கே தனி ரசிகர்கள் இருந்தார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில்,சென்னை மாநகரின் 379-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.மெட்ராஸ் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் வாழ்த்து ஒன்றை ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அதில்,

“கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபில் னு அந்த பக்கம் வந்தோம்
ஒரு நாளு அது செம தாறு மாறு
என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்”
என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க