• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3ஆவது டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் – கோலி

August 22, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 வரை உயிரிழந்துள்ளனர்.கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில்,இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி கேரளா வெள்ளப்பெருக்கு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் ட்விட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

அதில்,“கேரளாவில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்,முடிந்தவரை அனைவரும் தங்கள் வீட்டிலே இருக்கவும்.விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புகிறேன்.

மேலும்,இந்த மோசாமான சூழலில் தங்களின் முழு ஆதரவையும் வழங்கிய இந்திய ராணுவத்திற்கும்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.நம்பிக்கையோடும்,பாதுகாப்போடும் இருங்கள்” என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில்,இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க