• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்குதண்டனை

August 21, 2018 தண்டோரா குழு

மத்திய பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்தில் படித்து வந்த 7 வயது சிறுமி,கடந்த ஜூன் 26-ம் நாள் கடத்தப்பட்டார்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையினை மேற்கொண்ட காவல்துறையினர் அன்றையே தினமே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்,அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயற்சித்துள்ளது தெரியவந்தது.இதனையடுத்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் பெற்றார்.

இதையடுத்து,இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் CCTV காட்சி உதவியுடன் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாலிகள் இர்ஃபான் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை கடந்த இரண்டு மாதங்களாக மண்ட்சார் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில்,இன்று குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க