August 21, 2018
தண்டோரா குழு
அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் “கோலமாவு கோகிலா”.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைதுள்ளார்.இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில்,இப்படம் கடந்தஆகஸ்ட் 17ம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில்,”கோலமாவு கோகிலா” படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.