August 21, 2018
தண்டோரா குழு
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் நேரடியாக +2 பொதுத்தேர்வை எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.நேரடி தனித்தேர்வராக +2 தேர்வு எழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது.இனிமேல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிறகே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித்தேர்ச்சி பெற்றவர்கள்,நேரடியாக பிளஸ் 2 தேர்வை,தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதி இருந்தது.ஆனால்,தற்போது பிளஸ் 1 தேர்வும் அரசு பொதுத்தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால்,10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது.அவர்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் தான்,பிளஸ் 2 தேர்வை எழுத முடியும் என கூறப்பட்டு உள்ளது.