August 20, 2018
தண்டோரா குழு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிகை திரிஷா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
காலவைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சரஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க திரு ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும்,இப்படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன்,விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.