August 20, 2018
தண்டோரா குழு
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,நேற்றிரவு தமிழகம் திரும்பிய விஜயகாந்த்,மனைவி பிரேமலதாவுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.