• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

August 20, 2018 தண்டோரா குழு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்,கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 210 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே மழைநீர் மற்றும் பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கொச்சி விமான நிலையத்தில் புகுந்துள்ளதால் விமான நிலையம் முழுவதும் செயல்பட முடியாத அளவிற்கு முடங்கியிருந்தது.இதன் காரணமாக ஆகஸ்ட் 19ம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொச்சியில் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.கொச்சி கடற்படை விமான தளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கியது.மேலும்,கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க