• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றிக்காக ஆடுங்கள்,அணியில் இடம் பிடிப்பதற்காக அல்ல – விராட் கோலி

August 20, 2018 tamilsamayam.com

கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் 37 வெவ்வேறு இந்திய அணி வீரர்கள் விளையாடி உள்ளனர்.இதனால் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமோ,இல்லையோ என்ற பயத்தில் ஒவ்வொரு வீரரும் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியா 292 ரன்கள் முன்னிலைப் பெற்று,இந்தியா வெற்றி பிரகாஷத்தில் உள்ளது.

டெஸ்ட் தொடரின் 3வது போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களும்,இங்கிலாந்து அணி 161 ரன்களில் ஆல் அவுட்டானது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி 2 விக்கெட் இழந்து 124 ரன்கள் எடுத்து 292 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.இன்னும் 3 நாள் ஆட்டம் பாக்கி உள்ளதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கோலி டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் ஜூன் 2015 முதல் டிசம்பர் 2017 வரை அடுத்தடுத்து 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.அதில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்தும் உள்ளது.இருப்பினும் இந்திய அணி ஒரு நிலைப்பு தன்மை இல்லாமல் வீரர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு விளையாடப்படுகின்றது.

கோலி பேசும் போது,“ஒவ்வொரு வீரருக்கும் அடுத்த போட்டியில் இடம் பெற வேண்டும் என்ற கட்டயத்தில் விளையாடுகின்றனர்.யாரும் அணியின் வெற்றிக்காக ஆட முயற்சிப்பதில்லை.எந்த வீரரும் எப்போது அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாது.உங்களுக்கான நேரம் வரும் போது அதை சரியாக பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்த வேண்டும்.யாரும் அணியில் நிரந்தரமாக இருக்க முடியாத என்ற நிலையிலேயே நான் விளையாடுகிறேன்.எந்த வீரனும் தனியாக அமர்ந்து இப்படி விளையாடினால் தான் அணியில் இடம் கிடைக்கும் என யோசிப்பதை விடுத்து,எப்படியாவது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற மன நிலையில் விளையாட வேண்டும்” என பேசியுள்ளார்.

மேலும் படிக்க