• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த 500 பேருக்கு உடனடியாக வீடு கட்டித்தரப்படும் – எஸ்.பி.வேலுமணி

August 18, 2018 தண்டோரா குழு

பவானி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோவை,திருச்சி,திருப்பூர், ஈரோடு,திண்டுக்கல்,தர்மபுரி,விழுப்புரம்,நாமக்கல்,தூத்துக்குடி,மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட பொருட்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.பின்னர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரண பொருட்களை இன்று அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

“2 கோடி மதிப்பிலான அத்யாவசிய பொருட்கள் 21 லாரிகளில் கேரளாவிற்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக கேரள எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் நிவாரண பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும்படியும்,தேவையான மருந்துகளை அனுப்பி வைக்கும் படியும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளாவில் பாலக்காடு,இடுக்கி,ஆலுவா உட்பட 14 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க முதல்வர் உத்திரவிட்டுள்ளதாகவும்,குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடைகள்,உணவு பொருட்கள்,பிரஷ்,பேஸ்ட் என 31 விதமான பொருட்கள் அனுப்பபடுகின்றது.மேலும்,கூடுதல் லாரிகளில் இன்னும் பொருட்கள் அனுப்பபடவுள்ளது.

பவானி ஆற்றின் கரையிலும்,வால்பாறையிலும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசியிருப்பதாகவும் கோவை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் உடனடியாக சரி் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க