• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி – பிரதமர் மோடி அறிவிப்பு

August 18, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து இன்று கொச்சி சென்ற அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்ளவிருந்த நிலையில் கொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆய்வை ரத்து செய்தார்.

பின்னர் ஆளுநர் சதாசிவம்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது கேரளாவில் வெள்ளம்,நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும், நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000,நிதியுதவியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

மேலும் படிக்க