• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி – பிரதமர் அறிவிப்பு

August 18, 2018 தண்டோரா குழு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக,பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார்.திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி சென்ற அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்ளவிருந்த நிலையில் கொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆய்வை ரத்து செய்தார்.

பின்னர் ஆளுநர் சதாசிவம்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது,கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

மேலும் படிக்க