• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு கோடி பணம் மற்றும் தங்க பிஸ்கட்களுடன் சென்ற ரயில் பயணி மர்ம மரணம்

August 21, 2016 தண்டோரா குழு

ராய்ப்பூரிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற ரயில் பயணி ஒருவர் ரயிலில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.அவர் வைத்திருந்த பையில் 99 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 தங்க பிஸ்கட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை சிஎஸ்டி ஹவுரா கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சுபாஷ் சந்த் சுரானா(55) என்பவர் பயணித்தார்.ரயில், டாடாநகர் ரயில் நிலையத்தைத் தாண்டியதும் சுயநினைவின்றி அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்த சக பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த அதிகாரிகள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், சுரானா மரணமடைந்தார்.அவர் மரணம் குறித்து விசாரணை செய்த ரயில்வே காவல்துறையினர் முதலில் மர்ம மரணம் எனக் கருதினர்.பின்னர் மருத்துவர்கள் உதவியுடன் நடத்திய சோதனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, உடைமைகளை சோதனை செய்த போது, அவர் பையில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 3 தங்க பிஸ்கட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணம் குறித்தும், தங்க பிஸ்கட்கள் குறித்தும் மேற்கு மிட்னாப்பூர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.மேலும் சுரானா மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க