• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரபல கஞ்சா கடத்தல் மன்னன் பாலாஜி கைது

August 17, 2018 தண்டோரா குழு

கோவையில் கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பிரபல கஞ்சா கடத்தல் மன்னன் பாலாஜி பீளமேடு காவல் நிலைய போலீஸாரால் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த மே மாதம் பதிமூன்றாம் தேதி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது,அவ்வழியே வந்த ஜீப் ஒன்று தணிக்கை செய்யப்பட்டது.அப்போது அதில் இருந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து ஜீப்பை சோதனையிட்ட பீளமேடு காவல் நிலைய போலீசார் ஜீப்பில் சிறு சிறு பண்டல்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும்,கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் வனராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் வசித்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கோவை பாலாஜி என்பவர் கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் பாலாஜியின் மனைவியான சந்தியா மற்றும் தோழி நிஷா ஆகியோருடன் இணைந்து விபச்சாரத்திற்கு இளம் பெண்களை ஈடுபடுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு பதிவு செய்த பீளமேடு காவல் நிலைய போலீஸார் பாலாஜி மற்றும் சந்தியா,நிஷா ஆகியோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 216 கிலோ கஞ்சா கடத்தியதாக ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், ராமநாதபுரம் பகுதியில் 35 கிலோ கஞ்சா கடத்தியதாக ராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும் இதேபோல் வடவள்ளி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.

இதையடுத்து கஞ்சா மன்னன் பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.இந்த சூழலில் பாலாஜியை பெங்களூரில் வைத்து பீளமேடு காவல்நிலைய போலீசார் இன்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாலாஜி தற்போது கோவை அழைத்து வரப்பட்டுள்ளார்.அவரை விசாரிக்கும் பட்சத்தில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும்,அவருக்கு உடந்தையாக யாரேனும் முக்கிய புள்ளிகள் உள்ளனரா என்பது குறித்தும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி ஏற்கனவே விபச்சார வழக்கில் பல முறை கைது செய்யப்பட்டுள்ளதும்,கோவையில் மட்டும் மூன்று முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய்ப்பட்டு தற்போது வெளியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.பல ஆண்டுகளாக கஞ்சா கடத்தல் தொழில் செய்து வரும் பாலாஜி முதல் முறையாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க