August 17, 2018
தண்டோரா குழு
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இடுக்கி அணை,திறந்துவிடப்பட்டதால் கேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.தேசிய பேரிடர் மீட்பு படை,ராணுவம்,கடற்படை,விமானப்படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில்,வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை,கேரளாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.