August 16, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை,நீலகிரி,தேனி,திண்டுக்கல்,நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும்,சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்து உள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதே இந்த மழைக்கு காரணம்.