August 16, 2018
தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு,சிறுநீரக தொற்று நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு விரைந்து சென்று,வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார்.சுமார் 50 நிமிடங்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த பிரதமர் நரேந்திரமோடி,அங்கு மருத்துவர்களை சந்தித்து,வாஜ்பாய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும்,ஆக.18,19ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.