August 16, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள குறிச்சி குளத்தில் மூன்று இலட்சம் மீன் குஞ்சுகள் இன்று விடப்பட்டுள்ளன.
கோவை பகுதியில் பருவ மழை அதிகரித்த வருவதால் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.அதன்படி ஆந்திர மாநில மீன் வியாபாரிகள் மூலமாக சுமார் மூன்று இலட்சம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டுள்ளன.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில்,
“தமிழ்நாட்டின் மொத்த நீர்ப்பரப்பு 3.63 லட்சம் ஏக்கர் ஆகும்.இதில் 2.24 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு குளங்களும்,குட்டைகளும் அமைந்துள்ளன.மீன்களில் மிக வேகமாக வளரும் கட்லா வகை மீன்கள், உண்பதற்கு மிகச் சுவையானது என கருத்படும் ரோகு மற்றும் மிர்கால் வகை மீன்கள் எங்களால் வளர்க்கப்படுகிறது.மூன்று மாதங்களில் நன்கு பலனுக்கு வரும் இந்த மீன்கள் 2 கிலோ எடையில் தொடங்கி நல்ல விலைக்கு போகும்”என தெரிவித்தனர்.