August 15, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தின் தலைநகர் சென்னையில்,புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் கே.பழனிசாமி,மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பினை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சுதந்திரதின உரையில் பேசிய அவர்,சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பதக்கங்கள் வென்றால் அல்லது சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டால் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் 2% உள் ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.