August 15, 2018
தண்டோரா குழு
தென்னிந்திய திருச்சபையின் கோவை மண்டலம் சார்பில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
கோவையில் விசுவாசபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ நல்ல சமாரியன் ஆலயத்தில்,தென்னிந்திய திருச்சபையின் கோவை மண்டலம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோவை மண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர்,கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி,கே.ஜி நிறுவனத்தின் பக்தவத்சலம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
சுதந்திரதின நாளை முன்னிட்டு இன்று முழுவதும் விசுவாசபுரம் பகுதியில் இந்த முகாம் நடைபெறுகிறது.இந்த முகாமில் சர்க்கரை அளவு,பொது மருத்துவம்,கண் மற்றும் பல் தொடர்பான பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் இலவசமாக அளிக்கின்றனர்.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.