August 15, 2018
தண்டோரா குழு
சுதந்திரதினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
இந்திய நாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு தலைமையில் நடைபெற்ற இம்முகாமை துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர் தொடங்கி வைத்தார்.மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும்,இளைஞர்களும் தங்களது ரத்தத்தை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.இதையடுத்து,ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் அவர்களின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.