August 15, 2018
தண்டோரா குழு
கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
கோவை வ.உ.சி மைதானத்தில் 72 வது சுதந்திர தினத்தைக் முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில்,ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியைக் ஏற்றினார்.பின்னர் காவல்துறை சார்பில் குதிரைப்படை,ஆயுதப்படை,ஊர்காவல்படை மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களின் அணிவகுப்புகளைக் ஏற்றுக்கொண்டார்.
மேலும்,அரசு துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.அதில் வேளாண்துறை,தோட்டக்கலைத்துறை வருவாய்துறை,மகளிர் மேம்பாட்டுதுறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மொத்தம் 304 பயனாளிகளுக்கு 44,22,980 ரூபாய் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.