August 13, 2018
தண்டோரா குழு
கோவை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சேவா சங்க தேர்தலில் தலைவர்,துணை தலைவர் மற்றும் 9 இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோவை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சேவா சங்கத்தின் தலைவராக மோகன்,துணை தலைவராக அம்பிகாவதி மற்றும் இயக்குனர்களாக ஆனதீஷ்வரன்,முஹம்மது நதீர்,ராமர்,பாலசுப்ரமணியன், ராதாரமாணன்,ஷீலாராசு,தாமோதரன்,ரேணுகாதேவி,பரிமளா ஆகிய 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சங்கத்தில் பதிவு செய்துள்ள ஆயிரத்து 138 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.வாக்களிப்பு மூலமாக இயக்குனர்களும்,இயக்குனர்கள் ஒன்றிணைந்து தலைவரும்,துணை தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இச்சங்கத்தில் தேர்தல் நடைபெறும். நீதிமன்றம் முத்திரை தலைகள்,வழக்கறிஞர்களுக்கான ரேஷன் பொருட்கள், திட்டங்கள் ஆகியவை இச்சங்கம் மூலம் மேற்கொள்ளப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.