August 13, 2018
தண்டோரா குழு
சாதி வன்முறையை தூண்டும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் பேசுவதாகவும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொங்கு மக்கள் முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளரான திருமா மணி என்பவர் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக கொங்கு இன பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெண்களை தவறாக பேசும் இந்த நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கொங்கு மக்கள் முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.மேலும்,இது போன்ற பேச்சுக்களால் சமூக ரீதியான பிரச்சனைகள் வருவதாகவும்,எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.