August 13, 2018
தண்டோரா குழு
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் இன்று காலமானார்.
நாட்டில் அதிக காலம் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியவர் என்ற பெருமையை பெற்றவர் சோம்நாத் சட்டர்ஜி(90) ஆவார்.மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது,லோக்சபா சபாநாயகராக இருந்தார். அவையை நடத்துவதில் சிறந்தவர் என பெயர் பெற்றவர் சோம்நாத் சட்டர்ஜி.
இதற்கிடையில்,உடல்நலக்குறைவால் சோம்நாத் சட்டர்ஜி கடந்த ஆக.10-ம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்,இன்று காலை 8.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.