தெறி படத்தின் வெற்றிக்கு பின இயக்குநர் அட்லி – விஜய் கூட்டணியில் கடந்த ஆண்டு(2018) தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ‘மெர்சல்’.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால்,சமந்தா என 3 ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான ‘மெர்சல்’ மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.உலக திரைப்பட விழாக்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டு வருகிறது.அதேசமயம் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மெர்சல் திரைப்படம் தேசியளவில் பிரபலமானது.இதுமட்டுமின்றி ஆசியாவில் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வானது.
இந்நிலையில்,மெர்சல் படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.ஆம் மெர்சல் படத்தை சீனாவில் வெளியிடுவதற்கான உரிமையை ‘HGC எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.படத்தை மான்டரின் மொழியில் டப் செய்து இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு (2019) தொடக்கத்திலோ சீனாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் தங்கல்,பஜ்ரங்கி பாய்ஜான்,சுல்தான் போன்ற இந்திய படங்கள் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.இதில் சுல்தான் படத்திற்கு பின் தளபதியின் மெர்சல் படம் சீன மொழியில் டப் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்