August 10, 2018
தண்டோரா குழு
கோவையில் அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று(ஆகஸ்ட் 10) நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதியன்று காலமானார்.இதனையடுத்து இன்று கோவை அனைத்து வழக்கறிஞர் சார்பில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஏ அரங்கில் நடைபெற்றது.
இதில் குற்றவியல் நீதிமன்ற செயலர் கலையரசு மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரது புகைப்படத்தை வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.