August 10, 2018
தண்டோரா குழு
தாய்லாந்து நாட்டில் புத்த துறவிக்கு 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாங்காக் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்த துறவி வைராபோன் சுக்போன்(39).சில ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை அமைப்பதாக கூறி,பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக பெற்று மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் பதிவாகின.
மேலும்,சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து போலீஸாரிடம் ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கானது, பாங்காக் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்,அவருக்கு 114 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.