August 10, 2018
தண்டோரா குழு
மெரினாவில் உள்ள சமாதியை அகற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று(ஆகஸ்ட் 10)மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மேட்டுபாளையம் திம்மனூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும்,ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறார்கள்.ஆனால் அரசியல்வாதிகள் தான் அதனை பயன்படுத்திக் கொள்வதில்லை.பொதுமக்கள் குறைகளை அரசியல்வாதிகளிடம் கூறாமல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மெரினாவில் நான் போட்ட வழக்கு இருந்திருந்தால் இன்று கலைஞர் சமாதி அங்கு அமைத்து இருக்க முடியாது.எனது வழக்கை வாபஸ் வாங்கக் கோரி,எனது வழக்கறிஞரை பொறுப்பு நீதியரசர் மிரட்டியதாகவும்,வாபஸ் வாங்காத காரணதால் தான் எனது வழக்கை தள்ளுபடி செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு ஆண்டிற்கு மேலாக நடைபெற்ற வழக்கை தள்ளுபடி செய்ததின் மூலம் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மீது நல்ல அபிப்ராயம் இல்லை.இந்த வழக்கை வாபஸ் வாங்க கோரி திமுகவினர் என்னையும் எனது வழக்கறிஞரையும் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும்,மெரினாவில் சமாதி அமைக்கக்கூடாது என பொதுநல வழக்கு தொடுத்தவர்கள் ஏன் வாபஸ் பெற வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர்,மெரினாவில் அமைத்துள்ள சமாதிகளை எடுப்பது தொடர்பான தனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இது குறித்த உத்தரவு நகல் வந்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.