August 10, 2018
தண்டோரா குழு
கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டவுள்ளது.மேலும் பலத்த காற்றும் வீசுவதால் மரங்கள் முறிந்து விழக்கூடும் சூழலும் உருவாகி உள்ளது.இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் செல்ல தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த ஒரு மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது.