August 9, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 6ம் தேதி மாலை காலமானார். நேற்று மாலை லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி கருணாதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சாமாதி அருகே அவரது உடல் அடக்கம் செய்யபட்டது.
தொடர்ந்து 2வது நாளாக இன்றும் காலை முதல் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று, காலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கருணாநிதி
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இரவு 7.40 மணியளவில், கருணாநிதி குடும்பத்தினர், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். மு.க ஸ்டாலின், மு.க அழகிரி, கனிமொழி, உதயநிதி, உள்பட கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கொட்டும் மழைக்கிடையே, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.